IPL 2026 | டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு!

குஜராத், சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியன் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு ‘பிளே-ஆப்’ இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் ஆமதாபாத்தில் நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் சென்னை, குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டியாகும். இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, குஜராத் அணி முதலில் களமிறங்குகிறது. இதனிடையே புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 2-வது இடத்திலும், சென்னை அணி 7-வது இடத்திலும் உள்ளது.

உத்தேச அணி விவரம் :

சென்னை : சஞ்சு சாம்சன் (WK), ருதுராஜ் கெய்க்வாட் (C), உர்வில் படேல், கார்த்திக் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், அகேல் ஹொசைன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன்.

குஜராத் : சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (C), ஜோஸ் பட்லர் (WK), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.