ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரரான வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ரிக்கல்டன் 37 ரன்களிலும் நமன் திர் 57 ரன்களிலும் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் கம்போஜ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கெய்க்வாட் மற்றும் சாம்சன் களமிறங்கியநிலையில், சாம்சன் 11(9) ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய உர்வில் படேல், கெய்க்வாட்டுடன் இணைந்து அதிரடியில் இறங்கினார். பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டை இழந்து சென்னை 62 ரன்கள் எடுத்தது.
ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களுடனும், கார்த்திக் 54 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டிய சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.







