TECH TIPS: எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய கூகுள் மேப்பின் 8 டிப்ஸ் and டிரிக்ஸ்…!

பயணத்தின் போது நமக்கு உதவும் படி, கூகுல் மேப்ஸ்-ல் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் காண்போம்…!

கையில் வரைப்படத்தை வைத்துக்கொண்டோ அல்லது எதிரில் வருவோரிடம் வழிகேட்டு கொண்டே பயணங்கள் மேற்கொண்ட காலம் மாலையேறிவிட்டது. உலகத்தை உள்ளங்கைக்குள் கொண்டு செல்போன் வரைபடங்களை google maps மூலம் அளிக்கின்றன. இந்த கூகுல் மேப்ஸின்

இந்தச் செயலியிலிருந்து சில அம்சங்கள் இதோ:

எவ்வளவு BUSY…?

கூகுள் மேப்ஸ், ஒரு நாளில் ஒரு இடம் எவ்வளவு BUSY- ஆக இருக்கிறது என்பதைக் காட்டும். இதனை முன்கூட்டியே பார்த்து வைப்பதன் மூலம் நாம் உச்சபட்ச கூட்ட நேரங்களைத் தவிர்க்கலாம்.

ஆஃப்லைன் கூகுள் மேப்ஸ்

தேவையான பகுதிகளுக்கான மேப்களை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். மொபைல் டேட்டா அல்லது வைஃபை இணைப்பு இல்லாத நேரங்களிலும் இது உதவும். இண்டர்நெட் இணைப்பு பலவீனமாக உள்ள பகுதிகள் மற்றும் ரோமிங்கில் இருக்கும்போதும் இது பயன்படும்.

Street View-யை பயன்படுத்தவும்

கூகுல் மேப்ஸின் முக்கிய அம்சங்களில் ஒன்று Street View. ஒரு இடத்திற்கு செல்வதற்கு முன்பே அந்த இடத்தின் தெருக்கள், அடையாளச் சின்னங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் ஆகியவற்றை நேரடியாகப் பார்த்து ஆராயலாம். இது அறிமுகமில்லாத பகுதிகளில் நமக்கு உதவும்.

டிரைவிங்கிற்கு உதவும் ஜெமினி

கூகுள் மேப்ஸில் ஜெமினியை நாம் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் கைகளால் இடங்களை தேடுவதற்கு பதிலாக குரல் மூலம் ஜெமினிக்கு கட்டளை இடலாம். உதாரணமாக நாம் ஒரு ஹோட்டலை தேட சொல்லி ஜெமினியிடம் கேட்கலாம். அது நாம் கோரும் வசதிகள் கொண்ட ஹோட்டல்களை நமக்கு பரிந்துரைக்கும்.

live location

கூகுள் மேப்ஸில் நாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் நம் live location-யை பகிர்ந்துகொள்ளலாம். இது பயணங்களின்போது பாதுகாப்பிற்கு துணைபுரிகிறது. அதே போல் தாமதமாகப் பயணம் செய்யும்போதுக் இது பயன்படும்.

வாகன நிறுத்துமிடம்

வாகனத்தை நிறுத்திய இடத்தைக் நாம் கூகுல் மேப்ஸ் மூலம் குறித்து வைத்துகொள்ளலாம். இது பெரிய வாகன நிறுத்துமிடங்கள் அல்லது அறிமுகமில்லாத பகுதிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. வாகனத்தைத் தேடுவதில் செலவிடும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

தனி வழி

இருசக்கர வாகன ஓட்டிகள், கார்கள் செல்ல முடியாத குறுகலான சாலைகள் வழியாகச் செல்லும் சிறப்பு வழிகளையும் கூகும் மேப்ஸ் வழங்குகிறது. போக்குவரத்து நெரிசலில் இது உதவிகரமாணதாக இது இருக்கும்.

மேம்பாலம்

கூகுள் மேப்ஸ், எப்போது மேம்பாலத்தைப் பயன்படுத்த வேண்டும், எப்போது சர்வீஸ் சாலையில் பயணிக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதலையும் வழங்குகிறது. இந்த அம்சம் இந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி மற்றும் பல இந்திய மொழிகளில் கிடைப்பதால், பயனர்கள் வழிமுறைகளைப் பின்பற்றுவது எளிதாகிறது. இது சிக்கலான சந்திப்புகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் குழப்பங்களைக் குறைக்கிறது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.