ஐபிஎல் 2026: முக்கிய வீரர்கள் இன்றி ராஜஸ்தானை எதிர்கொள்ளும் சென்னை…!

ஐபில் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

19 வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கௌகாத்தியில் நடைபெறும் இப்போட்டி இரவு 7 : 30 மணிக்கு தொடங்கிறது.

தசை பிடிப்பு காரணமாக 2 வாரங்களுக்கு ஓய்வு பெற்றுள்ள தோனி இந்த போட்டியை தவற விடுகிறார். அதே போல மற்றொரு சென்னை அணி வீரரான டிவால்ட் பிரெவிஸும் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிமாற்றம்

சென்னை அணியின்  முக்கிய ஆல்ரவுண்டாராக விளங்கியவர் ரவீந்திர ஜடேஜா. ரசிகர்களால் “ஜட்டு” என்று அழைக்கப்படும் இவர், 2022-ல் சிறிது காலம் அணிக்குத் தலைமை தாங்கினார். மேலும் 2023 இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரி விளாசி சென்னை அணி கோப்பையை வெல்ல உதவினார்.

ராஜஸ்தான் அணியில் 11 சீசன்கள் விளையாடியவர் சஞ்சு சாம்சன். அணியின் முன்னணி ரன் குவிப்பாளர் மட்டுமின்றி கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். சஞ்சுவின் தலமையிலான ராஜஸ்தான் அணி கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் IPL ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையே வர்த்த ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. அதன் படி சஞ்சு சாம்சனை 18 கோடி ரூபாய்க்கு , சென்னை அணியும், ரவீந்திர ஜடேஜாவை 14 கோடி ரூபாய்க்கு,  ராஜஸ்தான் அணியும் பரிமாற்றம் செய்து கொண்டன.

உத்தேச அணி விவரம்

ராஜஸ்தான் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி, ரியான் பராக் (கே), துருவ் ஜூரல் (வி.கீ), ஷிம்ரோன் ஹெட்மியர், ரவீந்திர ஜடேஜா, டோனோவன் ஃபெரீரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா,

சென்னை : ருதுராஜ் கெய்க்வாட் (கே), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஆயுஷ் மத்ரே, மாட் ஷார்ட், சிவம் துபே, கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, மாட் ஹென்றி, கலீல் அகமது,

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.