பஞ்சாபில் நடைபெற்ற சர்வதேச இரும்பு மனிதன் போட்டியில் தமிழக வீரர் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச அளவிலான இரும்பு மனிதர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தை சார்ந்த கண்ணன் என்பவர் கலந்து கொண்டு, இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த தாமரை குட்டி விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் அதிக எடை உள்ள பொருட்களை தன் மீது சுமந்தும், கைகளால் இழுத்தும் பல சாகசங்களை செய்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் நாகர்கோவில் அருகே கனரக லாரியை கயிற்றால் இழுத்து சாதனை படைத்து வந்துள்ளார்.
அண்மைச் செய்தி:அதானி குழும விவகாரம் – காங்கிரஸ் கட்சி மெகா பேரணி அறிவிப்பு
மேலும் 370 கிலோ எடை கொண்ட காரை சுமந்து வீர சாகச செயலையும் செய்துள்ளார்.
நாகர்கோவிலில் நடந்த சர்க்கஸில் தென் ஆப்பிரிக்கா வீரரின் சவாலை ஏற்று தனது இரு கைகளால் 85 கிலோ எடையுள்ள குண்டை தூக்கி சவாலில் வெற்றியும் பெற்றுள்ளார். இதனால் கண்ணன் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்றுள்ளார்.இந்த நிலையில் கண்ணன் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
–கோ.சிவசங்கரன்
பஞ்சாபில் நடைபெற்ற சர்வதேச இரும்பு மனிதன் போட்டி-தமிழக வீரர் வெள்ளி பதக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: