தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்காலத் தடை

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை…

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு தாள்-1 தாள்-2 என்று 2 நிலைகளில் இருக்கும். கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு தேர்வும், தாள் – 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பானது இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1 இல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மெண்ட், தாள்-2 இல் ஸ்பீடும் இருக்கும் என்பது போன்ற நிலையில் உள்ளது.

எனவே, 75 ஆண்டுகளாக நடைபெறும் முறையில் தாள்-1 இல் ஸ்பீட் தேர்வும், தாள் – 2 இல் ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற உத்தரவிட வேண்டும் என மனு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி தமிழகத்தில் பழைய முறைப்படி தாள்-1 இல் ஸ்பீடு தேர்வும், தாள்-2 இல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மென்ட் தேர்வும் நடைபெறும் என உத்தரவிட்டார்.

இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து திருச்சி, தட்டச்சு பயிற்சி நிலைய உரிமையாளர் பிரவீன் குமார் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். பிரவீன்குமார் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.