முக்கியச் செய்திகள் தமிழகம்

3ஆயிரம் கோடிக்கும் அதிகமான இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்கள் மீட்பு-அமைச்சர் சேகர்பாபு

“வக்ஃபு வாரியம் தங்களது சொத்துகள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் குறித்து
இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 ஆயிரம்
கோடிக்கு மேலான இந்து அறநிலையத்துறையின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு ‘ வள்ளலார் -200 ‘ எனும் பெயரில் முப்பெரும்
விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 5-ம் தேதி
சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை ராஜா
அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசிய இந்து
சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆன்றோர், சான்றோர் அனைவருக்கும் விழா எடுத்து வருகிறோம். தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் முதல்வர் வரைபடத்தை பார்த்து ஒப்புதல் வழங்கிய பிறகு பணிகள் தொடங்கும்.

வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் -5 ம் தேதி ‘தை கருணை ‘ நாளாக முதல்வர்
அறிவிப்பு செய்துள்ளார். ‘வள்ளலார் -200’ எனும் பெயரில் முப்பெரும் விழா சென்னை ராஜா
அண்ணாமலைபுரத்திலுள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில்
முதலமைச்சர் தலைமையில் அக்டோபர் 5 ம் தேதி நடைபெற உள்ளது.

வள்ளலார் பிறந்தநாள், வள்ளலார் தர்மசாலா தொடங்கியதன் 156ம் ஆண்டு, வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டிய 152ம் ஆண்டை கொண்டாடும் விதமாக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. வள்ளலார் பக்தர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினத்தில் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.


இந்து அறநிலையத் துறை சொத்துகள் யார் வசம் இருந்தாலும் அவை மீட்கப்படும். இந்த
ஆட்சியில் இதுவரை இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சொத்துகள் 3 ஆயிரம்
கோடிக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது.

ரேவர் கருவி மூலம் இந்து அறநிலையத் துறை நிலங்களை அளவீடு செய்து வருகிறோம்.
இதுவரை 80ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்துள்ளோம். இந்து அறநிலையத் துறை
சொத்துகள் கண்டறியப்பட்டு அவற்றை பாதுகாக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சொத்து பட்டியல் முழுமையாக
வெளியிடப்படும். வக்ஃபு வாரியம் தங்களது சொத்துகள் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து விசாரிக்க சொல்லி இந்து அறநிலையத் துறை ஆணையாளர் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்ற பிறகு இந்த விசயத்தில் முழு கருத்தையும் தெரிவிப்போம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது

G SaravanaKumar

விலங்குகள் கடத்தல் வழக்கு; வனவிலங்கு தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு!

Gayathri Venkatesan

வியாபாரிகளிடம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

G SaravanaKumar