சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஓராண்டு கால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
NSC எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 20 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு வட்டி விகிதம் 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகால தொடர் வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாததால் 5.8 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது.
PPF என குறிப்பிடப்படும், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 சதவீதம் என்ற அளவில் இருந்து மாற்றம் செய்யப்படவில்லை. பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனாவின் வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவே தொடர்ந்து நீடிக்கிறது.







