#INDvsSA | 3-ஆவது டி20 போட்டி… இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20…

#INDvsSA | 3rd T20 match... India - South Africa clash today!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணியும், 2 வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையலான 3-ஆவது டி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று (நவ.13) இரவு நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள் : “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. முந்தைய போட்டியில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், சொந்த மண்ணில் தொடரை வெல்ல வேண்டும் என்ற ஆவலில் தென் ஆப்பிரிக்க அணியும் விளையாடும். இதனால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் எந்த அணி வெற்றிபெற போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அணிகளின் விவரம் :-

இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது ரமன்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், வருண் சக்ரவர்த்தி.

தென்ஆப்பிரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பேட்ரிக் குருகர், மார்கோ யான்சென், அன்டில் சிம்லேன், ஜெரால்டு கோட்ஜீ, கேஷவ் மகராஜ், நபயோம்ஜி பீட்டர் அல்லது ஒட்னில் பார்ட்மேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.