இந்தோனேசியாவின் தீவு கூட்டங்களில் ஒன்றான ஜாவா தீவில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேற்கு ஜாவா மாகாணத்தின் மேற்கு பாண்டுங் மாவட்டத்தில் உள்ள பசிர் லாங்கு கிராமத்தில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரைகளை உடைத்து கொண்டு வெள்ள நீர் ஓடியது.
இந்த நிலச்சரிவில் 34 வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் 97 பேர் காணாமல் போனார்கள். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஏற்கனவே 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், இந்தோனேசியா நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, நிலச்சரிவில் மாயமான எஞ்சிய 72 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.







