டி.என்.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது  கோவை கிங்ஸ்! 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.  திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில்  டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.…

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில்  டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணியும், லைகா கோவை கிங்சும் மோதின. டாஸ் வென்ற கோவை கேப்டன் ஷாருக்கான், முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை அணி களம் இறங்கியது.
ஆனால் அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.  கேப்டன் ஜெகதீசன் (4 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (6 ரன்)  பாபா அபராஜித் (12 ரன்), சஞ்சய் யாதவும் (2 ரன்) எடுத்து அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் ஹரிஷ்குமார் (32 ) சசிதேவ் (23) ரன்கள் எடுத்து அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர்.  20 ஓவர் முடிவில் சென்னை அணி 8 விக்கெட்டுக்ளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.  கோவை தரப்பில் யுதீஷ்வரன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின்  சச்சினும், விக்கெட் கீப்பர் சுரேஷ்குமாரும் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். இதனால் கோவை அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாய் சுதர்சன் 64  சுரேஷ்குமார் 47 ரன்கள் குவித்தனர். 3 விக்கெட்டு வீழ்த்திய யுதீஷ்வரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். -இது கோவை அணியின 2 வது பெற்றி ஆகும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.