முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,876 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 11 லட்சத்து 08 ஆயிரத்தி 938 பேர் சிகிச்சை பெற்று வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில், 83 ஆயிரத்து 876 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு 1 லட்சத்திற்கும் கீழ் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 895 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 02 ஆயிரத்து 874 ஆக
அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 054 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய
சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 169.63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

NAMBIRAJAN

தலைமை ஆசிரியரைத் தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர் – வீடியோ வைரல்

Web Editor

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது

G SaravanaKumar