பாதியிலேயே படிப்பை தொடரமுடியாமல் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என்று ஹங்கேரி அதிபர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரானது கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறிவருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் சிக்கி வரும் இந்தியர்களை அண்டை நாடுகளின் உதவிகளுடன் மத்திய அரசு மீட்டு வருகிறது.
இந்த நிலையில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானம் மூலமாக இதுவரை அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்கொண்டு நாடு திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. உள்நாட்டிலேயே மருத்துவ படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டதில் ஹங்கேரி நாட்டின் உதவி அதிகமானது. உக்ரைனில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் உக்ரைன் – ஹங்கேரி எல்லை வாயிலாக நாடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் ஹங்கேரி அதிபர் விக்டர் ஆர்பனுடன் இன்று பிரதமர் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். அப்போது போர்நிறுத்தம் மற்றும் அமைதிக்கான வழிகள் குறித்து ஹங்கேரி அதிபர் மற்றும் பிரதமர் மோடி உரையாடினர். இது தொடர்ந்து உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற பெரிதும் உதவி ஹங்கேரி அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து ஹங்கேரி வாயிலாக இந்தியா திரும்பிய 6000 பேருக்கும் ஹங்கேரி அதிபர் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து உக்ரைனில் இருந்து பாதியிலேயே படிப்பை தொடரமுடியாமல் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என்று தெரிவித்தார். ஹங்கேரி பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் விவகாரத்தில் அமைதி நிலவ போதிய நடவடிக்கைளை எடுக்கவும் இரு நாடுகளும் இணைந்தே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.







