சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆட்கள் இருக்கும்போதே உள்ளே புகுந்து 70 சவரன் நகை கொள்ளையடித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரி, வீனஸ் காலனியில் சீனிவாசன் , தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் தூங்கி எழுந்த பின்னர் காலையில் இன்னொரு அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகளை எடுக்கச் சென்றனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளை போயிருந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வேளச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், மர்மநபர்கள் பைப் வழியாக ஏறி மொட்டைமாடிக்கு சென்று சீனிவாசன் குடியிருப்புக்குள் ஜன்னல் வழியே புகுந்து கொள்ளையடித்திருப்பது தெரிந்தது.
அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆட்கள் இருக்கும் போது வீட்டில் கொள்ளையடித்திருப்பது அந்தப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.