இந்திய பங்குச் சந்தைகளில், இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே அதிகபட்ச உயர்வுடன் பங்கு வர்த்தகம் நடைபெற்றது.
வர்த்தக நேர நிறைவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 242 புள்ளிகள் அதிகரித்து, 61,354 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 82 புள்ளிகள் அதிகரித்து, 18,147 ஆகவும் இருந்தது.
இதையும் படியுங்கள் : பஞ்சாபில் அலுவலக நேரம் மாற்றம் – மின்சாரத்தை சேமிக்க மாநில அரசின் புதிய முன்னெடுப்பு
இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வுக்கு காரணம் என்ன என்று பார்க்கும் போது, சர்வதேச பங்குச் சந்தைகளில் உள்ள சரிவுகள், அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி திவால், ஐரோப்பிய, சீன, கொரிய சந்தைகளிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாதது தான்.
அதே சமயம் இந்திய உள்நாட்டு பொருளாதார நிலவரம் ஆரோக்கியமான நிலையில் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பால், இந்தியா உறுதியான சந்தை என கருதிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளன. இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் சென்ற வார இறுதியில் தொடங்கி தற்போது வரை உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.







