முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

கந்தகாரை நெருங்கியது தலிபான்: 50 இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் கந்தகாரை தலிபான்கள் நெருங்கியுள்ளதால், இந்திய தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் 50 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் களமிறங்கின. அந்தப் படைகள் தலிபான்களுக்கு எதிராக தீவிர போரில் ஈடுபட்டு வந்தன. இதனால் தலிபான் படைகள், தொடர்ந்து போரிட்டாலும் ஆப்கானின் முக்கிய பகுதிகளை பிடிக்க முடியாமல் இருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தலிபான்களுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து அமெரிக்கா, ஆப்கா னிஸ்தானில் இருந்து வெளியேற முடிவு செய்தது. அதன்படி அமெரிக்க படைகள் வெளியேறி வருகிறது. இதையடுத்து தீவிர போரில் இறங்கியுள்ள தலிபான் படைகள், அந்நாட்டின் 85 சதவீத பகுதிகளை படித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தலிபான்களின் தீவிரமான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், ராணுவத்தினர் சரணடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தலிபான் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி, கந்தகாரில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை மறுத்துள்ள தூதரக வட்டாரங்கள், பாதுகாப்பு காரணமாக சுமார் 50 அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆரம்பகாலத்தில் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தேன்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உருக்கம்!

Saravana

லாலு சிகிச்சை: ஜார்கண்ட் முதல்வரை சந்திக்கும் தேஜஸ்வி

Saravana

“கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடி

Halley Karthik