அரசு கல்லூரியில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது, திடீரென பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் அமைச்சர் நேற்றிரவு சேகர்பாபு ஆய்வு செய்தார். இரவு நேரம் என்பதால் செல்போன் வெளிச்சத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, திடீரென அமைச்சர் நின்ற இடத்தில் மண்ணுளி பாம்பு ஒன்று புகுந்தது. இதைகண்ட கல்லூரி என்.சி.சி அலுவலர் துரிதமாக செயல்பட்டு அமைச்சரை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றார். பாம்பை அடிக்க வேண்டாம் என அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியதை அடுத்து, அவருடன் சென்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.







