அதிரடி காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள் : நியூசிலாந்திற்கு இமாலய இலக்கு நிர்ணயம்…………….!

டி 20 உலகக்கோப்பை தொடரின் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்கள் குவித்துள்ளது.

10 வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார் . இதையடுத்து  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி சிறப்பான தொடக்கத்தை அணிக்கு அளித்தது.

இதில் 21 பந்துகளில் 52 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா ரச்சின் ரவிந்திராவிடம் கேட்ச் கொடுத்தார். சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கபப்ட்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளுக்கு 89 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த இஷான் கிஷனும் 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இதனால் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ஜெம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.