இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியிதாவது “ வெளிப்படையான, நேர்மையான, ஊழலற்று நிர்வாகம் கொடுப்பதுதான் நமது லட்சியம். மருவத்துவத் துறையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இருக்காது. இதை ஆணித்தரமாக சொல்கிறேன”.
நான் முதல்வன் திட்டம் முடக்கமென ஸ்டாலின் கூறியது ? குறித்த கேள்விக்கு, “மக்கள் பயன்பெறும் திட்டம் எதுவாக இருந்தாலும் தொடரும்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மருத்துவமும், கல்வியும் மாநில பட்டியலுக்கு வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். நீட் ஒரு தேர்வு தான், அதுவே உலகம் அல்ல. மாணவர்கள் மன அழுத்தம் அடைய வேண்டாம். மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 104 என்ற பிரத்தியேக உதவி என் அறிவிக்கப்படுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்குள்ள வேண்டும்” என்று கூறினார்.
தவெகவினர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “எந்த கட்சியாக இருந்தாலும் காவல்துறை முழுமையாக செயல்படுவார்கள். எந்தவகையிலும் அரசியல் தலையீடு இருக்காது” என்று கூறினார்.




