முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் செய்திகள்

ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் – ஐ.நா.கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் உரை

உணவு பாதுகாப்பு, வளர்ச்சிக்கான தரவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இந்திய இணைந்து செயல்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய உயர்நிலைக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடன், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

உக்ரைன் போர் உலகின் அனைத்து நாடுகளக்கும் கவலையை ஏற்படுத்தி வருவதகாவும், உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார்.

 

உணவுப்பொருள், எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவைகள் தொலைதூர நாடுகளிலும் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அணு ஆயுத மிரட்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார். மேலும் காலநிலை நடவடிக்கை, உணவுப்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான தரவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றார்.

சீனா தீவிரவாதிகளுக்கு தடைவிதிக்க முட்டுக்கட்டையாக இருக்க கூடாது என வலியுறுத்திய அவர், எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும் தீவிரவாதத்தின் ரத்தக்கறைகளை மறைக்க முடியாது என கூறினார். ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட தீவிரவாதிகளை பாதுகாக்கும் நாடுகளும் உள்ளன. ஐ.நா.வின் தடைகளை அரசியலாக்குபவர்கள், சில சமயங்களில் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அளவிற்கு கூட அதை செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எம்.பி.க்கள் ராஜினாமா – சிக்கலில் போரிஸ் ஜான்சன் அரசு

Web Editor

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்; இந்திய வீரர் பதக்கம் திரும்ப பெறப்பட்டது

G SaravanaKumar

உயிரிழப்புக்கு போலீஸ் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் கதறல்

G SaravanaKumar