முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல் – தொடரை கைப்பற்றப்போவது யார்?

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெறுவதால், தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த மழை பாதிப்புக்குள்ளான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஐதராபாத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதனால் இன்றைய ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் சம நிலையில் இருப்பதால், தொடரை கைப்பற்றும் வேகத்தில் இரண்டு அணிகளும் செயல்படும். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது ஆர்.அஸ்வின்.

 

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மேத்யூவேட், கம்மின்ஸ், நாதன் எலிஸ் அல்லது டேனியல் சாம்ஸ், அல்லது சீன் அப்போட், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக நிர்வாகிகளுடன் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடிய இபிஎஸ்…

Web Editor

மாணவனை கடுமையாக தாக்கிய பள்ளி ஆசிரியர் – பெற்றோர் போலீசில் புகார்

Dinesh A

ஷாருக்கான், நயன்தாரா திடீர் சந்திப்பு..! எதற்கு தெரியுமா?

Web Editor