இந்தியா எப்போதும் சிறந்த நண்பனாக இருக்கும்- ஃபிஜி பிரதமர்

ஃபிஜிக்கு இந்தியா எப்போதும் சிறந்த நண்பனாக இருக்கும் என்று ஃபிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா கூறினார் இந்தோ-பசிபிக் பகுதிகளில் ஒன்றான பிஜி நாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.…

ஃபிஜிக்கு இந்தியா எப்போதும் சிறந்த நண்பனாக இருக்கும் என்று ஃபிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா கூறினார்

இந்தோ-பசிபிக் பகுதிகளில் ஒன்றான பிஜி நாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவருக்கு அந்நாட்டு கலாசாரம் மற்றும் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நடி நகரில் நடந்த 12-வது விஷ்வ இந்தி கூட்டமைப்பு நிகழ்ச்சியை ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஃபிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா கலந்து கொண்டார்.

இதையும் படிக்கவும்: திரிபுரா தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி அழைப்பு

அப்போது பேசிய ஃபிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா, ஃபிஜியில் 12வது இந்தி மாநாடு நடைபெறுவதற்கு மிகப் பெரிய ஆதரவை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். ஃபிஜிக்கு இந்தியா எப்போதும் சிறந்த நண்பனாகவும், நம்பகமான பங்காளியாகவும் இருக்கும். பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாடு பாராட்டுக்குரியது என்று கூறினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஃபிஜி மற்றும் இந்தியா இடையே சிறந்த முறையில் பயணம் மேற்கொள்ளும் வகையில் விசா தள்ளுபடி தொடர்புடைய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே நெருங்கிய மற்றும் நீண்டகால நட்புறவுகள் உள்ளன. அவை நமது மக்களுடன் தொடர்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டவை.

ஃபிஜி நாட்டின் சுகாதாரம், கல்வி, வேளாண்மை போன்ற திறன் கட்டமைப்பு பணிகளில் அந்நாட்டுடன் பல்வேறு பிரிவுகளிலும் இணைந்து பணியாற்றி தேச கட்டமைப்பு முயற்சிகளில் ஈடுபட இந்தியாவுக்கு நல்வாய்ப்பு கிடைக்க பெற்று உள்ளது என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.