முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் ‘டிரா’ செய்த இந்திய பெண்கள் அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டி, பிரிஸ்டலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய பெண்கள் அணி பேட்டிங்கை தொடங்கியது. அறிமுக வீரர் ஷபாலி வர்மாவும் ஸ்மிருதி மந்தனாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷபாலி 15 ரன்களிலும் ஸ்மிருதி 10 ரன்களிலும் வெளியேற, பூனமும் கேப்டன் மித்தாலி ராஜும் நிதானமாக ஆடினர்.

பூனம், 35 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய மித்தாலி ராஜ், 41.1வது ஓவரில் அரை சதம் கடந்தார். 45வது ஓவரில் 72 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்களில் தீப்தியை (3 0ரன்) தவிர யாருமே நிலைத்து நிற்காததால், 50 ஓவர்கள் முடிவில் இந்திய பெண்கள் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பெண்கள் அணி பேட்டிங்கை தொடங்கியது. லாரன் வின்ஃபீல்டு-ஹில்லும், டேமி பீமோன்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். லாரன் 16 ரன்களில் கோஸ்வாமி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, டேமி நிலைத்து நின்று ஆடினார். அடுத்து வந்த கேப்டன் ஹீதர் நைட் (18) விக்கெட்டை ஏக்தா பிஸ்ட் சாய்க்க, அடுத்து, நட் சிவர் வந்தார். இவரும் டாமியும் நிதானமாக ஆடி ரன்களை உயர்த்தினர்.

இந்திய பெண்கள் அணியினரால் இவர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. முதலில் மெதுவாக ஆடிய நட் பிறகு அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து 34.5 ஓவர்களிலேயே 202 ரன்கள் எடுத்து இங்கிலாந்து பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது. டாமி 87 ரன்களும் நட் சிவர் 74 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இந்திய பெண்கள் அணி தோல்வியை தழுவியது.

Advertisement:
SHARE

Related posts

சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது – மத்திய அரசு

Jeba Arul Robinson

“ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அவர் குடும்பத்தினருக்கு மட்டுமே நல்லது செய்வார்” – முதல்வர் பழனிசாமி

Gayathri Venkatesan

மேகதாது விவகாரத்தில் தமிழர் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்: ஜெயக்குமார்

Gayathri Venkatesan