முக்கியச் செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: ஏமாற்றினார் ஷபாலி வர்மா!

டெஸ்ட் போட்டியை போல ஒரு நாள் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி வர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் ‘டிரா’ செய்த இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டி, பிரிஸ்டலில் இன்று தொடங்கியது. இந்திய பெண்கள் அணியில், டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷபாலி வர்மா, இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடினார். அவர் இன்றைய ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார்.

இதற்கிடையே டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய பெண்கள் அணி பேட்டிங்கை தொடங்கியது. அறிமுக வீரர் ஷபாலி வர்மாவும் ஸ்மிருதி மந்தனாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஸ்மிருதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஷபாலி சிறப்பாக வந்த பந்துகளை அடித்து ஆடத் தொடங்கினார். அவர் 14 பந்துகளில் மூன்று பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து ஸ்மிருதியுடன் பூனம் ராவத் இணைந்தார். பத்தாவது ஓவரில் ஸ்மிருதி மந்தனா 10 ரன்களில் அனியா பந்துவீச்சில் கிளின் போல்டானார். பின்னர் பூனமுடன் , கேப்டன் மித்தாலிராஜ் இணைந்தார். 11 ஓவர்கள் முடிவில் இந்திய பெண்கள் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

அணி விவரம்:

இந்தியா:
மித்தாலி ராஜ் (கேப்டன்) ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, பூனம் ராவத், ஹர்மன்பிரித் கவுர், தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, ஜுலன் கோஸ்வாமி, தனியா பாட்டியா, பூஜா, ஏக்தா பிஸ்ட்,

இங்கிலாந்து:
ஹீதர் நைட் (கேப்டன்), கேத்தரின், அன்யா ஸ்ருப்சோல், டேமி பீமோன்ட், நட் சிவர், எமி ஜோன்ஸ், ஷோபியா, லாரன் வின்ஃபீல்ட், சோபி எக்லெஸ்டோன், சாரா கிளன், கேட் கிராஸ்.

Advertisement:

Related posts

சட்டமன்ற தேர்தல்: சிறப்பு பேருந்துகள் விவரம்

Gayathri Venkatesan

புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு நிலவரம்

Gayathri Venkatesan

உலக வில்வித்தை தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை!

Vandhana