முக்கியச் செய்திகள் தமிழகம்

27 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் நாளை முதல் 27 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தில் கொரானா தொற்று குறைய தொடங்கியதை அடுத்து ஏறத்தாழ 50 நாட்களுக்கு பிறகு நாளை முதல் 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல பொது மேலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு மதுரையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரை மண்டலத்தில் 714 நகரப் பேருந்துகள், 120 புறநகர் பேருந்துகள் என மொத்தமாக 834 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மகளிருக்கான இலவச பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழித்தடங்களில் மக்கள் வரத்தின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும், சானிடேசர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த மோடி உத்தரவு!

Saravana Kumar

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன!

Gayathri Venkatesan

கருப்புபூஞ்சை நோய் சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

Vandhana