இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில், இந்தியா – இலங்கை அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

டாஸ்வென்று, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக இலங்கை அணி வீரர் அசலங்கா 68 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.
அதைப்போல் இலங்கை அணி வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 71 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் சஹால் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீபக் சஹர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.







