இலங்கைக்கு எதிரான 2 வது நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 34 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை எளிதில் தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் 50 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் சாரித் அசலங்கா 68 பந்துகளில் 65 ரன்களையும், அவிஷ்கா பெர்னாண்டோ 71 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கலமிறங்கிய இந்திய அணி, 34 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதிகபடியாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், மனிஷ் பாண்டே 37 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியா ஒரு ரன்கள்கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் இந்திய அணிக்கு வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.







