முக்கியச் செய்திகள் இந்தியா

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: ரூ. 8 ஆயிரம் கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாட்டில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, 8 ஆயிரத்து 843 கோடி ரூபாய் அளவுக்கு வெளிசந்தைகள் மூலம் கூடுதல் கடன் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் 23 கோடியே 63 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களில் 21 கோடியே 92 லட்சம் பேர், அதாவது, 92.8% பேர் தங்களது ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்தார்.

ரேஷன் கார்டு

2020-2021 இடைப்பட்ட காலங்களில் மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு கூடுதலாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி தமிழ்நாட்டிற்கு 8 ஆயிரத்து 843 கோடி ரூபாய் அளவுக்கு வெளிசந்தைகள் மூலம் கூடுதல் கடன் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மொத்தமாக 17 மாநிலங்களுக்கு 37 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வெளிசந்தையில் இந்த திட்டத்துக்காக கடன் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அனுமதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

கூட்டணி குறித்து தேமுதிகவுடன் யாரும் பேசவில்லை: சுதீஷ்

Nandhakumar

2K கிட்ஸின் மொழி எமோஜி: உலக எமோஜி தினம்

ராஜ்ஜியம் இழந்த ராஜா: எடியூரப்பா முழுமையாக ஆட்சி செய்ய முடியாது ஏன்?

Ezhilarasan