நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று 1 பில்லியன் அதாவது 100 தடுப்பூசி எண்ணிக்கையை இந்தியா கடக்க உள்ளது.
காலை 7.30 மணி நிலவரப்படி 99.85 கோடி பேருக்கு நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவின் இணையதளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரை 75 சதவிகிதத்தினர் முதல் டோஸையும், 31 சதவிகிதத்தினர் 31 சதவிகிதத்தினர் இரண்டாம் டோஸையும் செலுத்தியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தகுதியுடையோர் அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் 1 பில்லியன் தடுப்பூசி எண்ணிக்கையை எட்ட உதவ வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சாதனையை கொண்டாடும் விதமாக டெல்லி செங்கோட்டையில் பிரமாண்ட தேசியக் கொடி ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கிகள் வாயிலாக இந்த வெற்றியை தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கிராமங்களில் சுகாதார ஊழியர்களை கொண்டாடும் விதமாக போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்து பெருமைப்படுத்தபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Dr @MansukhMandaviya ji will launch a song and audio-visual film to celebrate India's milestone of 100 crore #COVID19 vaccinations.
🗓️ October 21, 2021
🕧 12:30 PM
📌 Red Fort, New Delhi pic.twitter.com/vnUqeIpvT5— Office of Dr Mansukh Mandaviya (@OfficeOf_MM) October 21, 2021
ஒரு விநாடிக்கு 700 தடுப்பூசிகள் வீதம் செலுத்தப்படுவதாகவும் எனவே 100 கோடியின் கடைசி தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர் யாரென்று கண்டறிவது சற்று கடினம் என்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்திற்கும், மாநில செயலாளரான அருண் பகத் தமிழ்நாட்டின் கோவைக்கும் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை நாடு முழுவதும் 4,52,651 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









