முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்மா உணவகங்களில் சப்பாத்தி பற்றாக்குறை; மாநகராட்சி விளக்கம்

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி பற்றாக்குறைக்கு தனியார் அரைவை ஆலைகளில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே காரணம் என சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

கடந்த 10 நாட்களாக சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை என எழுந்த குற்றச்சாட்டுக்கு சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“பெருநகர சென்னை மாநகராட்சியின் 403 அம்மா உணவகங்களிலும் இரவு உணவு வேளையில் சப்பாத்தி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நிதி நெருக்கடி நிலையிலும் இந்த அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி மற்றும் கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாகவும், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, எண்ணெய் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் கூட்டுறவு பண்டக சாலைகளிலிருந்தும் பெறப்பட்டு வருகிறது.

இவ்வாறு பெறப்படும் பொருட்களில் கோதுமை தனியார் ஆலைகளில் மாவாக அரைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக ஒரு சில மண்டலங்களில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் தற்பொழுது சப்பாத்தி இரவு வேளைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான சமையல் பொருட்களும் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 403 அம்மா உணவகங்களில் பணியில் உள்ள எந்த ஒரு சுய உதவி குழு உறுப்பினரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை. அனைத்து அம்மா உணவகங்களிலும் விற்பனைக்கு ஏற்ப சமச்சீராக இருக்கும் வகையில் உறுப்பினர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.” என மாநகராட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

578 கோயில்களில் 2 மாதங்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம்: அமைச்சர் சேகர்பாபு

G SaravanaKumar

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

Gayathri Venkatesan

27 வயதில் உயிரிழந்த பிரேசில் அழகி – காரணம் இதுதான்

Web Editor