இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி 6,999 ஆக குறைந்திருந்த தொற்றுப் பாதிப்பு, நேற்று கொஞ்சம் அதிகரித்து, 8 ஆயிரத்து 309 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 4,723 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,96,776 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,69,247 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து 10,207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,28,506 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றுக்கு தற்போது 99,023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80,98,716 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,24,10,86,850 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Advertisement: