வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தமிழ் வம்சாவளி வீரர் சிறப்பாக பந்துவீசியதை அடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு சுருண்டது.
வெஸ்ட்இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி, முதல் நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 73 ரன்கள் எடுத்தார். கேப்டன் திமுத் கருணாரத்னே 42 ரன்களும் மூத்த வீரர் மேத்யூஸ் 29 ரன்களும் எடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், ட சுழற்பந்து வீச்சாளர்கள் வீராசாமி பெருமாள் 5 விக்கெட் வீழ்த்தினார். இவர் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். ஜோமில் வாரிகன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 29.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்த இருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அத்துடன் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. பிளாக்வுட் 44 ரன்களில் ஜெயவிக்ரமா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். கேப்டன் பிராத்வெய்ட் 22 ரன்னுடனும், கிருமா பொன்னர் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
இந்தப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய வீராசாமி பெருமாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 9 வருடங்களாகிவிட்டன. அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதற்குப் பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை. இப்போது சேர்க்கப்பட்டுள்ள அவர், ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.