ஒமிக்ரான் வைரஸ் பீதியை கிளப்பி இருப்பதை அடுத்து வெளிநாடுகளுக்கான விமான கட்டணங்களை, விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.
உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப் பட்டுள்ளது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த வைரஸ் மிகவும் அபாயகரமானது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பல்வேறு நாடுகளுக்கான விமானக் கட்டணங்களை, விமான நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன. டெல்லியில் இருந்து கனடாவில் உள்ள டொரன்டோ நகருக்கு இதுவரை 80 ஆயிரம் ரூபாயாக இருந்த விமானக் கட்டணம், 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து லண்டன் நகருக்கு இதுவரை 60 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் இஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கான கட்டணம் 90 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயக இருந்த நிலையில், சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கான கட்டணம் நூறு சதவிகிதம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகள் ரூ.6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.