சரக்குப் பாட்டிலில் பல்லி: குடிமகன் அதிர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் பல்லி கிடந்ததால், மது வாங்கியவர் அதிர்ச்சியடைந்தார். டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபாட்டில்களில் பல்லி, பாம்பு, தவளைகள் கிடப்பது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் பல்லி கிடந்ததால், மது வாங்கியவர் அதிர்ச்சியடைந்தார்.

டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபாட்டில்களில் பல்லி, பாம்பு, தவளைகள் கிடப்பது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி குடிமகன்கள் பரபரப்பாக புகார் தெரிவித்தாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபாட்டிலில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி என்பவர், தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையைன்குளம் கிராமத்துக்குச் சென்றுள்ளார். அவர் அங்குள்ள அரசு மதுபானக் கடையில், மதுபாட்டில் வாங்கியுள்ளார். அப்போது மதுவில் பல்லி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.