இந்தியாவில் புதிதாக 31,923 பேருக்கு கொரோனா : 282 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,923 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களை வாட்டி வதக்கும் கொரோனா கொடூரம், கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்தது. பிறகு மீண்டும்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,923 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களை வாட்டி வதக்கும் கொரோனா கொடூரம், கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்தது. பிறகு மீண்டும் அதிகரித்தது. ஏற்ற இறக்கமாக இருந்து வந்த கொரோ னா, இப்போதும் அப்படியே இருக்கிறது. நேற்று குறைந்திருந்த கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் இந்த தொற்றால் 31,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 282 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,46,050 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 31,990 பேர் குணமடைந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தொற்றுக்கு 3,01,604 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 83,39,90,049 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 71,38,205 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள் ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.