‘சேலைகளை துவைக்கணும்’: பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வித்தியாச தண்டனை

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர், லலன் குமார் சஃபி (20). சலவைத்  தொழிலாளரான இவர்,…

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர், லலன் குமார் சஃபி (20). சலவைத்  தொழிலாளரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவரை மானபங்கப் படுத்தினார். அவரை பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றுள்ளார். இதையடுத்து லாகஹா போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் கோரி, அவர் ஜஞ்சார்புர் (Jhanjharpur ) கூடுதல் செசன்ஸ் நீதி மன்றத்தில் அந்த வாலிபர் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நிதிபதி அவினாஷ் குமார் அவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார்.

அதாவது, குமார் வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் சேலைகளையும் இலவசமாக குமார் ஆறு மாதத்துக்கு சலவை செய்ய வேண்டும். பின்னர் அதை அயர்ன் செய்து ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்க வேண்டும். இதைக் கண்காணித்து ஊர் பஞ்சாயத் துத் தலைவர் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அவர் இதை செய்யவில்லை என்றாலும் நீதிமன்றத்தில் பஞ்சாயத்து தலைவர் தெரிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த வித்தியாசமான தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த நிதிஷ்குமார் என்பவருக் கு ஜாமீன் வழங்கிய இதே நீதிபதி, 5 ஏழை குழந்தைகளின் கல்விக்கு மூன்று மாதம் பணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.