காலணிகள், கட்டுமானப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்வு.. வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம்

காலணிகள், கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம் தெரிவித் துள்ளது. அரியலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அச்சங்க…

காலணிகள், கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம் தெரிவித் துள்ளது.

அரியலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அச்சங்க தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார். கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரெடிமேட் துணிகள் , இரும்பு பொருட்கள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை, 18 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது எனக் கூறினார். ஏற்கனவே கொரோனாவால் வாங்கும் சக்தியை இழந்து உள்ள மக்களுக்கு, வரிஉயர்வு பெரும் சுமையாக இருக்கும் என்பதால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.