முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,740 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா 2வது அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருவதும் தொற்றுப் பாதிப்பு குறை வதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது 3வது அலை வந்தால் அதனை எதிர் கொள்வதற் கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன், 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று, இப்போது ஏற்ற இறக்கமாக இருக்கிறது. திடீரென்று அதிகரிப்பதும் இறங்குவதுமாக இருக்கும் இந்த கொரோனா தொற்று, கடந்த 24 மணி நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 19,740 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில், 23,070 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,32,48,291 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2,36,643 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 248 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை  4 லட்சத்து 50 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 93.99 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கிற்கு பின் திறக்கப்பட்ட மதுபானக் கடைக்கு சூடம் ஏற்றிய இளைஞர்கள்!

Jeba Arul Robinson

பாலாவுடன் மீண்டும் இணைவதை உறுதி செய்தார் நடிகர் சூர்யா

Halley karthi

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

Halley karthi