“வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று” – குடியரசுத் தலைவர் #DroupadiMurmu பெருமிதம்!

வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

"#India is one of the fastest growing economies" - President Thirelapathi Murmu

வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார். இந்த உன்னதமான நேரத்தில் நமது விடுதலை போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 8% ஆக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது,

“இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடி மக்களின் பங்கு அளப்பறியது. தில்கா மாஞ்சி, பிர்சா முண்டா, லக்‌ஷ்மண் நாயக் என பழங்குடியைச் சேர்ந்த பல தலைவர்கள் சுதந்திரத்துக்காக போராடியுள்ளனர். மற்ற தினங்களைப் போல நாட்டுப்பற்று மிக்க சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் பண்டிகையாக மக்கள் கொண்டாட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் : “17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை” – மதுபான கொள்கை வழக்கு குறித்து #ManishSisodia பேட்டி!

இந்தியா சுதந்திரம் அடைந்து நாடு பிரிக்கப்பட்டபோது லட்சக்கணக்கான மக்கள் துயரம் அடைந்தனர், உயிரிழந்தனர், நிர்கதியாகினர். அந்தத் துயரத்தை நினைவுகூரும் நாள் இது. சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்பு ஈடுசெய்யமுடியாத மக்கள் துயரை நினைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு துணை நிற்க வேண்டும். வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும் வளர்ச்சி விகிதம் நாட்டு மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.