#IndependenceDay2024 | “ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கம்” – #CMRL அறிவிப்பு!

நாளை (ஆக. 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக்…

Chennai Metro Rail Corporation , metro trains ,Sunday ,schedule ,tomorrow , Independence Day

நாளை (ஆக. 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுதந்திர தின விழாவை ஒட்டி நாளை (ஆக. 15) விடுமுறை என்பதால், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி” – பெண் மருத்துவர் கொலை சம்பவம் குறித்து #RahulGandhi காட்டம்!

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சுதந்திர தின விழாவை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் மிகுந்த நேரமான நண்பகல் 12 மணி முதல் 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இரவு 8 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.