உலகம் அளவில் குறைப் பிரசவங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் 37 வாரங்கள் நிறைவடைவதற்கு முன் பிறக்கும் குழந்தைகளை குறைப்பிரசவம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக சாதாரண பிரசவம் மற்றும் அறுவைசிகிச்சைகள் மூலமாக குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் நிறுவனம் 2020-ம் ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் 45% குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்ததாக தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் படி, “2020 ஆம் ஆண்டில் 13.4 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளன. அதில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய ஐந்து நாடுகளில் பிறந்துள்ளன.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குழந்தைகளை பராமரிக்க சிறந்த மருத்துவ பிரிவு இல்லாமை, கிராமப்புறங்களில் சுகாதாரப் பாதுகாப்பு பற்றாக்குறை மற்றும் செயற்கை முறை கருத்தரிப்பு போன்றவை குறைப்பிரசவத்திற்கு காரணம் என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
மேலும் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில் பத்தில் ஒரு குழந்தை இறந்துவிடுகின்றன. அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது மூலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கலாம் எனவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி இந்தியாவில் 30.16 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 9.14 லட்சம் குழந்தைகளும், நைஜீரியாவில் 7.74 லட்சம் குழந்தைகளும், சீனாவில் 7.52 லட்சம் குழந்தைகளும் குறைப்பிரசவத்தில் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு வழிகாட்டுதல்கள், ஆரோக்கியமான உணவு, கற்ப காலத்தில் குழந்தைக்கு உகந்த ஊட்டச்சத்து, மற்றும் கர்பிணி பெண்கள் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது போன்றவைகள் குறைப்பிரசவத்தைத் தடுக்க உதவும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.








