உலக அளவில் இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் – நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சியில் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு

உலக அளவில் இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் என  கிருஷ்ணகிரியி நடைபெற்று வரும் நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சியில் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில்…

உலக அளவில் இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் என  கிருஷ்ணகிரியி நடைபெற்று வரும் நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சியில் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு சிறந்த கல்லூரியை தேர்வு செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் கல்வி கண்காட்சியை நடத்தி வருகிறது. மதுரை, கோவை, சென்னை, சேலம் மாவட்டங்களை தொடர்ந்து இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கல்வி கண்காட்சி பிரம்மாண்டமாக துவங்கியது.

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் தலைமையில் நடைபெற்ற இந்த   கல்வி கண்காட்சியை மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முன்னணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.  மேலும் மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதற்கான வசதி உள்ளிட்டவை கல்வி கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன்.

இந்த கல்வி கண்காட்சியில் பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக மதிபெண்கள் பெற்ற முதல் 5 மாணவிகளுக்கு பரிசாக தலா 1 கிராம் தங்க நாணயம், வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்ததாவது..

” தற்போது மாணவர்கள் எந்த மாதிரியான கல்வியை பயில வேண்டும் என்பதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியபடுத்தவே இது போன்ற கல்வி கண்காட்சியை ஊடகங்கள் நடத்துகிறார்கள்.

கல்விதான் நம்மை மேம்படுத்துகிறது. குருகுலம் என்பது குருக்களை நாடி சென்று கல்வியை கற்றுக் கொள்வது. எங்கள் காலத்திற்கு முன்பு அங்கு சென்றுதான் கற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்று உங்களை தேடி கல்வி வந்துள்ளது. சரியான முறையில் கற்று மேம்படுங்கள்.

பனிரெண்டு வகுப்பு முடித்த உடனேயே  8 மாதங்களாக மாணவர்களின் காலங்கள் வீணாகிறது. அவர்களுக்கு  பெற்றோர்களும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று உற்று நோக்க வேண்டும். கொரோனா தாக்கங்கள் வந்த பிறகு கல்லூரிகளை சரியான காலகட்டங்களில் பயில முடியாமல் இன்றைய தலைமுறையினர் தவித்து வருகின்றனர். இதற்காகதான் நியூஸ் 7 தமிழ் இந்த கண்காட்சியை நடத்துகிறது. இந்த  கல்வி கண்காட்சி பயன்படுத்தி மாணவர்கள் பயன்பெற வேண்டும்.

சட்ட படிப்பு, மருத்துவ படிப்பு, வேளாண்மை பட்டபடிப்பு, இது போன்ற பல்வேறு பட்ட படிப்புகள் உள்ளது. இதில் எது முதன்மையான படிப்பு என்பது தெரியுமா.? அனைத்து பட்டபடிப்புகளும் சரிசமமாக படிப்புதான். 12 வகுப்பு படித்த உடனே பட்டபடிப்புகளுக்கான  கலந்து ஆய்வுகள் காலதாமதம்  செய்வது ஏற்புடையது அல்ல. உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும். அப்போது தான் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

40 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருந்தாலும் 100 மதிப்பெண்  பெற்றிருந்தாலும் உயர்கல்வி பயில அனைவரும் தகுதியானவர்கள். கல்வி என்பது இந்தியாவில் முக்கியமான ஒன்று. இந்தியர்கள் தான் உலக அளவில் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். இது போன்ற கல்வி கண்காட்சியை நடத்தும் நியூஸ் 7 தமிழ் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.