உலகத்திற்கே வழிகாட்டும் தேசமாக இந்தியா வளர்ந்து கொண்டு இருக்கின்றது என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பாக சென்னை மண்டல அலுவலகம் இந்திய சுதந்திர தினத்தின் 75-ம் ஆண்டு அமிர்த விழாவையொட்டி அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கி வரும் 13 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு இந்தியரும் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 அன்று இளைஞர்களுக்கு மிகப்பெரிய அழைப்பை விடுத்தார். 2047 நோக்கி நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி முயற்சியில் இந்த நாட்டின் முன்னேற்றத்தை நாம் உணர்ந்து வருகிறோம்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. சாலைப்போக்குவரத்து ரயில் போக்குவரத்து மேம்பட்டு உள்ளது. சுயசார்பு பாரதம் இன்று உருவாகி வருகிறது இதற்கு முன்பாகவே கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் சொந்தமாக கப்பலோட்டிய வெள்ளையர்களை எதிர்த்தார். கோவை சிறையில் அவர் செக்கிழுத்து, அவர் ஆற்றிய தியாகங்களை நாம் போற்ற வேண்டும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஊக்குவித்து வருகிறார். மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களை ஊக்குவித்து வருகிறார். இது போன்ற பிரதமரின் செயல்பாடு உலகத்திற்கு வழிகாட்டும் நாடாக நமது நாடு உயர்ந்து வருகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் மூலம் ரயில் பயணங்கள் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாக்கிய கோர்க்கப்பல் நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்துள்ளார். இதற்கு முன்பெல்லாம் வெளிநாடுகளில் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் நாம் உள்நாட்டிலேயே இது போன்ற சக்தி வாய்ந்த கப்பலை தயாரித்து உள்ளோம் என்று தெரிவித்தார்.







