இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு: செப்.11இல் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிப்பு

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவிற்கு நாட்டில் ஒருநாள் அரசு துக்கம் செப்டம்பர் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று இரவு உடல்நலக் குறைவால் காலமானார்.…

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவிற்கு நாட்டில் ஒருநாள் அரசு துக்கம் செப்டம்பர் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று இரவு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

அவரது மறைவிற்கு பல்வேறு நாட்டின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 11ஆம் தேதி நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அந்நாளில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய நாள் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.