நீட் தேர்வில், சென்னையை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ஒருவர், பயிற்சி மையம் செல்லாமலேயே நல்ல மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
நாடு முழுவதும் எம் பி பி எஸ், பி டி எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வானது கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நேற்று முன் தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. அகில இந்திய அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 80 சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து அரசு பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் சுந்தரராஜன். இந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் 720 மதிப்பெண்களுக்கு 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் பயிற்சி மையம் செல்லாமல் ஆசிரியர் உதவியுடனும், பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
நீட் தேர்வு கடினமான தேர்வு அல்ல என்றும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என கூறிய சுந்தரராஜன், தோல்வி அடைந்த மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.