முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனாவை இந்தியா தைரியத்துடன் எதிர்கொண்டது: நிர்மலா சீதாராமன்

கொரோனாவை தைரியத்துடனும் நெகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் இந்தியா எதிர்கொண்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சர்வதேச நிதியம் – உலக வங்கி, ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்றது. இந்தியா சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் கலந்து கொண்டார்.

சர்வதேச பொருளாதாரத்தை வலுவான, நீடித்த, சமநிலையான, ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்வதற்கான, செயல்திட்டத்தை துரிதமாக செயல்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், உலக பொருளாதார மீட்சி, பெருந்தொற்றால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு ஆதரவு, நிதி மற்றும் சுகாதார துறைகளில் நீண்ட கால நிலைத்தன்மையை உருவாக்குதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் போன்றவை ஜி20 நாடுகளின் கொள்கை இலக்குகளாக இருக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.

மேலும் பேசிய நிர்மலா சீதாரமன், கோவிட் நெருக்கடியை இந்தியா தைரியத்துடனும் நெகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் எதிர்கொண்டது என்றும் கோவிட்டுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது என்றும் சொன்னார்.

கோவிட் காலகட்டத்தில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாகவும் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

Advertisement:
SHARE

Related posts

104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley karthi

50% இருக்கைகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும்!

Halley karthi

பெருந்தொற்று பரவி ஒராண்டிற்கு பிறகு முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்த லட்சத்தீவு!

Saravana