முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை விரைந்து முடிக்க பேச்சுவார்த்தை: மு.பெ.சாமிநாதன்

ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை விரைந்து முடிக்க தமிழ்நாடு – கேரள, இரு மாநில தொழில்நுட்பக் குழு அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோயில் சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு கேரள மாநில அதிகாரிகள் தலைமையில் தொழில் நுட்பக் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உறுதி அளித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

Halley karthi

மேற்கு வங்கம், அசாமில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!

Gayathri Venkatesan

ஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லியில் 20 பேர் உயிரிழப்பு!

Halley karthi