குஜராத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்தில் நாள்தோறும் 5 ஆயிரத்தும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதியானவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல இரவு, பகல் பாராமல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைகளில் தயார் நிலையில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் சேவை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 60 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.







