“இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்” – நாடாளுமன்றத்தில் தகவல்!

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியுள்ளதாவது:…

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர்
கூறியுள்ளதாவது:

செவிலியர் – மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது.  தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி 2022 ஜூன் நிலவரப்படி 13,08,009 ஆங்கில முறை மருத்துவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு 1 டன் ஆப்பிள் மாலை!

மேலும் 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர். அந்த வகையில், நாட்டில் மருத்துவர்கள்- மக்கள்தொகை விகிதம் 1: 834 ஆக உள்ளது.  மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனால் நாட்டில் மருத்துவம் பயில்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து,  2014-ஆம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில் இப்போது நாட்டில் 706 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  இது 82 சதவீத உயர்வாகும்.  2014-இல் 51,348 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இருந்தன.  இப்போது இந்த எண்ணிக்கை 1,08,940 ஆக உயர்ந்துள்ளது.  மருத்துவ மேற்படிப்புக்கான இடம்31,185-இல் இருந்து 70,674 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 127 சதவீத அதிகரிப்பாகும் என்று அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.