அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு 1 டன் ஆப்பிள் மாலை!

செஞ்சியில் சக்தி பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் மஸ்தானுக்கு கிரேன் உதவியுடன் 1 டன் ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வலம்புரி வாசுகி விநாயகர் கோயிலில் 11-ம் ஆண்டு சக்தி பூஜை…

செஞ்சியில் சக்தி பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் மஸ்தானுக்கு கிரேன் உதவியுடன் 1 டன் ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வலம்புரி வாசுகி விநாயகர் கோயிலில் 11-ம்
ஆண்டு சக்தி பூஜை விழா நடைபெற்றது.  சக்தி பூஜையை முன்னிட்டு வலம்புரி வாசுகி
விநாயகர்,  அங்காளம்மன்,  அய்யப்பன் ஆகிய சிலைகளுக்கு சிறப்பு பூஜைகளும்,
ஆராதனைகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சக்தி பூஜையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு 1 டன் ஆப்பிள் கொண்டு உருவாக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது.  இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.